பொன்னேரியில் மகளிர் வலையமைப்பு சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

மீஞ்சூரில் மகளிர் வலையமைப்பு சார்பில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
மீஞ்சூர் வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மகளிர் வலை அமைப்பு சார்பில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு நினைவு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மீஞ்சூர் வட்டாரக் கிளை மகளிர் வலையமைப்பு சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டாரத் தலைவர் பிரசன்னவதனா தலைமையில் உதயகுமார் முன்னிலையில் வட்டார செயலாளர் விஜயலட்சுமி வரவேற்புரையாற்றினார்.
மாநில ஓய்வு பிரிவு பொருளாளர் கே.ஆர்.ஜெகநாதன் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி இயக்கப் பேருரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில் கல்வி வளர்ச்சியில் ஆசிரியர்கள் பங்கு குறித்தும், ஆசிரியர் தினத்தையொட்டி எடுக்க வேண்டிய உறுதிமொழி குறித்தும், தற்காலத்தில் ஆசிரியர்கள் பணி குறித்தும் எடுத்துரைத்தார். மாவட்ட செயலாளர் ராஜாஜி,மாவட்ட தலைவர் இளங்கோவன்,மாவட்ட பொருளாளர் சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வட்டார மகளிர் வலையமைப்பு பொருளாளர் ஷோபா நன்றி உரையாற்றினார்.தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் மகளிர் வலையமைப்பு பிரிவு பொறுப்பாளர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu