திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகே தீ பிடித்து எரிந்தது டாரஸ் லாரி டயர்

திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகே தீ பிடித்து எரிந்தது டாரஸ் லாரி டயர்
X

திருவள்ளூர் அருகே டாரஸ் லாரி திடீர் என தீபிடித்து எரிந்தது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகே டாரஸ் லாரி டயர் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை எண்ணூர் பகுதியில் இருந்து திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் தனியார் செங்கல் சேம்பருக்கு சாம்பல் மண் ஏற்றிக்கொண்டு சுமார் 7 டன் எடை கொண்ட டாரஸ் லாரியை ஓட்டுனர் சங்கர் என்பவர் திருவள்ளூர் அரசு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே ஓட்டி வந்தபோது லாரி டயரில் ஏற்பட்ட உரசலின் காரணத்தால் டயர் எரியத் தொடங்கியது,

உடனடியாக லாரியை நிறுத்தி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்,தீயை அணைத்த பிறகு லாரி ஓட்டுனர் லாரியைபழுது பார்காமல் லாரியை மணவாளநகர் அடுத்த பட்டறை வழியாக எடுத்து சென்றபோது லாரியின் பின்பக்க டயர் கழன்று லாரிக்கு முன் ஓடியது,

அப்பகுதியில் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் மீது உரசாமல் லாரி டயர் சிறிது தூரம் சென்று கீழே சாய்ந்தது,இதனால் பெரும் விபத்து அப்பகுதியில் தவிர்க்கப்பட்டது,

பின்னர் அப்பகுதிக்கு வந்த கிராம மக்கள் லாரியில் இருந்த சாம்பலை அப்புறப்படுத்தி லாரியை சாலையோரம் நிறுத்தினார், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் லாரி டயர் கழன்று ஓடியதில் அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் ஓட்டுநரும் உயிர்தப்பினர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்