பார் தொடங்க ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் கைது
மேலாளர் கலைவாணன்.
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் அரசு டாஸ்மார்க் மேற்கு மாவட்ட அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மேற்கு மாவட்ட மேலாளராக கலைவாணன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
சென்னை முகப்பேரைச் பகுதியை சார்ந்த தாணு என்பவர் திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் பகுதியில் ஏற்கனவே டாஸ்மார்க் கடைகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் புதிதாக ஆரம்பிக்க பார் உரிமை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்த மனுவை பரிசளித்த டாஸ்மாக் மேற்கு மாவட்ட செயலாளர் கலைவாணன் பார் உரிமை கேட்டு மனு விண்ணப்பித்திருந்த தாணுவிடம் ரூபாய் ஒரு லட்சம் வழங்கினால் மட்டும் தான் உரிமை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத தாணு இது குறித்து காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ரூ.1 லட்சம் தாணுவிடம் கொடுத்து இந்த பணத்தை மேலாளரிடம் கொடுக்குமாறு கூறி மறைந்திருந்தனர்.
அப்போது தாணு அப்ப பணத்தை எடுத்து சென்று மேலாளர் கலைவாணிடம் கொடுத்தபோது அப்பணத்தை தன் கார் ஓட்டுநர் சங்கரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். பின்னர் பணத்தை ஓட்டுனர் சங்கரிடம் வழங்கியபோது விரைந்து வந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சங்கரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் டாஸ்மாக் மேலாளர் கலைவாணன் மற்றும் அவரது ஓட்டுநர் சங்கர் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu