திருவள்ளூர் மருத்துவ கல்லூரியில் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ் கனவு பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியானது மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ‘சமூகப் பிணியும் நீதியின் பாதையும்" என்ற தலைப்பில் ஊடகவியலாளர் கார்த்திகைசெல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கி வைத்து, மாணவ, மாணவியர்களிடையே கலந்துரையாடினார்.
மேலும் மாணவ மாணவியர்கள் சமூக நீதியின் பாதையில் கல்வித்தரம் உயர்கல்வின் வளர்ச்சிகளை பற்றியும் மற்றும் பெற்றோர்களை பிள்ளைகள் எவ்விதத்தில் பராமரிக்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி உரையாடலில் பங்கேற்ற ஊடகவியலாளர் கார்த்திகை செல்வன் வாயிலாக தெளிவுபெற்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கார்த்திகை செல்வன் மாணவர்களிடையே பேசிய போது மாற்றங்கள் படிப்படியாக வரும் என்றும் மாற்றங்கள் பல ஆண்டுகள் கடந்தும் மலரும் நிலை இந்த சமுதாயத்தில் இருப்பதாகவும், கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும் உயர்கல்வியில் அந்த நிலையை எட்ட பல மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது என பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu