தாமரைப்பாக்கம் சின்னையா சர்வேஷ்வரா தியான நிலையத்தில் சூரசம்ஹாரம்
தாமரைப்பாக்கத்தில் உள்ள சின்மயா சர்வேஷ்வரா தியான நிலையத்தில் சூரசம்ஹார விழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Soorasamharam -திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் கிராமத்தில், சின்மயா சர்வேஷ்வரா தியான நிலையம் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சின்மய ஆறுபடை முருகன் கோவிலில், கடந்த 26ம் தேதி முதல் நாள்தோறும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வண்ண மலர்களால் திரு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு தீப தூப ஆராதனை நடைபெற்றது.
பின்னர் தினமும் மாலையில் ஒவ்வொரு கிராமம் என சுவாமியை டிராக்டரில் வைத்து பாகல்மேடு, காதர்வேடு, செம்பேடு, மேல்சம்பேடு, தாமரைப்பாக்கம், மாகரல் கண்டிகை, மாகரல், மேலகொண்டையூர், கர்லபாக்கம், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சுவாமி திருவீதி உலா சென்று வந்தது. சுவாமி திருவீதியுலா சென்ற கிராம பகுதிகளில் உள்ள பக்தர்கள் பூ.பழம், என சமர்ப்பித்து சுவாமியை வழிபட்டனர். இந்நிலையில், நேற்று நிறைவு நாளன்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஆலயத்தில் உள்ள சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, பன்னீர், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து தூபத் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலை உற்சவரை அலங்காரம் செய்து, டிராக்டரில் வைத்து திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது,
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கையில் வேல் ஏந்தி சுவாமி உலா வரும் விழாவில் கலந்து கொண்டனர் சென்னை சின்மயாமிஷன் சுவாமி. மித்ரானந்தா கொடியசைத்து துவங்கி வைத்தார் இந்த திருவீதி உலா நிகழ்ச்சியானது, தாமரைப்பாக்கம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் சின்மயா சர்வேஸ்வரா தியான நிலையத்திற்கு வந்தடைந்தது தொடர்ந்து தியான நிலையத்தின் பின்புறம் உள்ள வளாகத்தில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி, சுவாமி. சகலானந்தா மற்றும் சேவகர் அருணாச்சலம் ஜி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, 'அரோகரா, வேலனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா' என்ற கோஷங்களுடன் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கைகளால் சுவாமிக்கு சந்தனாபிஷேகம் செய்தனர். பக்தி பரவசத்துடன், பக்தர்கள் மனமுருகி இறைவனை வழிபட்டனர்.
விழாவில் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், அம்பத்தூர் முன்னாள் நகர மன்ற தலைவர் சேகர், தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா துளசிராமன் ஆகியர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பின்னர் அங்கு வந்திருந்த 1000.க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சின்மயா சர்வேஸ்வரா தியான நிலையத்தின் சார்பில், அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu