தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அறிவிப்பையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அறிவிப்பையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு
X

மாநாடு அறிவிப்பையொட்டி தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு அறிவிப்பையொட்டி பட்டாசு வெடித்து திருவள்ளூரில் கட்சியினர் இனிப்பு வழங்கினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டின் தேதியை அக்கட்சித் தலைவரும் நடிகருமான விஜய் , அறிவித்ததையடுத்து‌ தொண்டர்கள் பட்டாசுகள்,வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் அளித்ததை தொடர்ந்து,வருகிற 23-ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடைபெறுவதற்காக ‌ 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ள‌ நிலையில்,வருகிற 23 ஆம் தேதி மாநாடு நடைபெற இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.


இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சி தலைவர் நடிகர் விஜய், இன்று காலை 11 மணி அளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி,தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் திருவள்ளூர் பெரிய குப்பம் ரயில் நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் திருவள்ளூர் தொகுதி மற்றும் பூந்தமல்லி தொகுதி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா