திருவள்ளூர் மாவட்டத்தில் 50 ஊராட்சிகளுக்கு டிராக்டர், மின்கலன் வழங்கல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 50 ஊராட்சிகளுக்கு டிராக்டர், மின்கலன் வழங்கல்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா மு நாசர் கலந்துகொண்டு டிராக்டர், மின்கலன் இயந்திரங்களை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 50 ஊராட்சிகளுக்கு டிராக்டர், மின்கலன் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மையினை செழுமைப்படுத்தும் பொருட்டு 5 ஊராட்சிகளுக்கு தலா ரூ.8.5 இலட்சம் வீதம் ரூ. 42.5 இலட்சம் மதிப்பீட்டிலான டிராக்டர்களையும் 50 ஊராட்சிகளுக்கு தலா ரூ.2.65 இலட்சம் வீதம் ரூ.1.32 கோடி மதிப்பீட்டிலான மின்கலன் இயக்கு வாகனங்களையும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்.

உடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், முன்னிலையில் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உடன் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி கே.வி.ஜி. உமாமகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரூபேஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் என ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story