திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்
தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அறிவித்துள்ளதால் மாணவர்களுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தகப் படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்: "திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ மாணவியரின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகமாக போதை பழக்கத்திற்கு அடிமையாகி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வேதனை அளிக்கிறது இதனை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலனை காக்க மாணவி திசை நோக்கி தவறான திசைக்கு செல்லாமல் இருக்க மாணவர்களை விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவத்துவதன் மூலம் இந்த பழக்கத்திற்கு அடிமையாக்கும் செயல்பாடுகளிலிருந்து அவர்களை தடுக்கலாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில் 15 நாட்களுக்கு மாணவர்கள் தங்குவதற்கு, உணவு, பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இந்த பயிற்சி முகாமில் தடகளம், கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டு வருகின்றது. எனவே 10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் பதிவு செய்து இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்" என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu