கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை  விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த நிதி ஒதுக்கா விட்டால் போராட்டம் தொடரும் என கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால் கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக திருவள்ளூரில் நடைபெற்ற கரும்பு விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாலங்காடு பகுதியில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை துவங்கி 40 ஆண்டுகளாகியும் இந்த கூட்டுறவு சக்கரை ஆலையை மேம்படுத்திட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் வெறும் பழுது பார்க்கிற வேலை மட்டுமே செய்து வருவதால் ஆலையில் இயங்கி வரும் இயந்திரங்கள் அடிக்கடி பழுதாகிவிடுவதால் கரும்பு அரவை பாதிக்கப்படுகிறது.

இதனால் சர்க்கரை உற்பத்தி பாதிப்பதோடு திருவள்ளூர் மாவட்டம், அரக்கோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட கரும்பு விவசாயிகளும்பாதிக்கப்படுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆண்டுக்கு 7 லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இதில் 2.25 லட்சம் டன் கரும்பு தான் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரைக்கப்படுகிறது. மீதமுள்ள 5 லட்சம் டன் கரும்பு தனியார் ஆலைக்கு செல்கிறது. இதனை தடுக்க ஆலை நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள இயந்திரங்கள் மூலம் ஆண்டுக்கு 49 சதவீதம் மட்டுமே கரும்பு அரவை செய்யப்படுகிறது. எனவே சர்க்கரை ஆலையை மேம்படுத்தினால் உற்பத்தி திறனும் அதிகரிக்கும், தனியார் கரும்பு ஆலைக்கு கரும்பு செல்வதை தடுக்க முடியும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளதால் இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தி கரும்பு விவசாயிகளை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்திட தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால் இந்த போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு