திருவள்ளூரில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில பொருளாளர் சி.பெருமாள் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து மேம்படுத்த வேண்டும், எத்தனால் மற்றும் மின் உற்பத்தி தொகைக்கு ரூ.192 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வாங்கிட வேண்டும், தேசிய கரும்பு மேம்பாட்டு நிதியகத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை பெற்ற கடனில் தமிழக அரசு செலுத்திய ரூ.9.5 கோடிப்போக ரூ.16.32 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும், சர்க்கரை விற்பனையில் உள்ள கோட்டா முறையில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கையில் கரும்புகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் சி.பெருமாள், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் ஆயிரம் விவசாயிகளை திரட்டி தலைமைச் செயலகத்தை நோக்கி சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆர்பாட்டத்தில் கரும்பு விவசாயிகளின் சங்க பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், சாமி.நடராஜன், ஜி.சம்பத், ஆப்சன் அகமது, மாவட்ட பொருளாளர் பிரபு மாவட்ட செயலாளர் ஸ்ரீநாத், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெயச்சந்திரன் மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu