திருத்தணி அருகே முன்னாள் நீதிபதியின் பண்ணை நிலத்தில் திடீர் தீ

திருத்தணி அருகே முன்னாள் நீதிபதியின் பண்ணை நிலத்தில் திடீர் தீ
X
திருத்தணி அருகே முன்னாள் நீதிபதியின் பண்ணை நிலத்தில் மரங்கள் தீப்பிடித்து எரிந்தது.
திருத்தணி அருகே முன்னாள் நீதிபதியின் பண்ணை நிலத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திருவாலங்காடு அருகே காவேரிராஜபுரம் கிராமத்தில், கர்நாடகா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.டி.தினகரனுக்கு சொந்தமான சுமார் 400 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு, பல்வேறு வகையான மரங்கள் பயிரிட்டு வளர்த்து வருகின்றனர் . கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது.

இதில் செடி, கொடிகளும் காய்ந்து வருகிறது. இந்நிலையில், திடீரென முன்னாள் நீதிபதியின் நிலத்தில் திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியதால் அவ்வழியாக சென்றவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில்1.ஏக்கர் பரப்பளவில் தீ பரவி, புற்கள், செடிகள் தீக்கிரையாகின. ஆனால் மா, தேக்கு உள்ளிட்ட கொய்யா உள்ளிட்ட மரங்கள் தப்பியது. தீ பரவியது எப்படி? யாராவது தீ வைத்தார்களா என திருவாலங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!