திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வு கூட்டம்
X
By - Saikiran, Reporter |14 Oct 2024 7:30 PM IST
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வடகிழக்கு பருவ மழை முன் எச்சரிக்கை தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி முருகேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் நாளை மறுதினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் ஆலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி முருகேஷ் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் அத்தகைய இடங்களில் தாழ்வான இடங்களில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களை தங்குவகிப்பது குறித்தும் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தீயணைப்பு துறையினர் மருத்துவர் துறையினர் கால்நடை துறையினர் வருவாய்த் துறையினர் என அனைத்து அனைத்து துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் மாவட்டத்தை பொறுத்தவரை அதிக ஏரி குளங்கள் ஆறுகள் நிறைந்த மாவட்டம் என்பதால் கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறு கண்காணிக்கும் அதிகாரிகள் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு தன்மை குறித்தும் கேட்டறிந்தார்கள்.
இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu