கிருஷ்ணா கால்வாயில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்

கிருஷ்ணா கால்வாயில்   தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்
X
கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு விநாயகபுரத்தில் வசித்து வருபவர் முரளிதரன். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரனேஷ் அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது நண்பர் வேல் சரவணனுடன் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில் தொட்டிக்கலை என்கின்ற இடத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கால் தவறி தண்ணீரில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். அவருடன் குளிக்கச் சென்ற அவரது நண்பர் வேல் சரவணன் கூச்சலிட்டுள்ளார். அவர் ஓடி வந்து காப்பாற்றுவதற்கு முன்பாகவே பிரனேஷ் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார் . இதுகுறித்து, முரளிதரன் செவ்வாபேட்டை காவல் நிலைத்திருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். போலீசாரும் தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து, தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவரின் சடலத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை கிடைக்காததால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!