கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் கால் கழுவச் சென்ற மாணவன் பலி

கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் கால் கழுவச் சென்ற  மாணவன் பலி
X

பலியான மாணவன் பூபதி.

பலியான மாணவன் கிருஷ்ணாவின் உடலை 2 நாட்களுக்குப் பின்பு சடலமாக தீயணைப்பு படையினர் மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அனந்தரி கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ் ஆச்சாரி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் பூபதி(14) பூபதி. அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இதனை அடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் பகுதியில் காலை இயற்கை உபாதை கழிக்க சென்ற மாணவன், கால் கழுவ கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் சென்றார். அப்போது தவறி தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து பென்னலூர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் தேடியும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து இரண்டு நாட்களுக்கு பின்பு பூண்டி சத்தியமூர்த்தி ஏரியில் சடலமாக மீட்டனர். பின்னர் கைப்பற்றிய மாணவன் உடலை புல்லரம்பாக்கம் போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!