மருத்துவகனவு நிறைவேறாததால் சான்றிதழை ஆளுநருக்கு அனுப்பக்கோரிய மாணவியின் தந்தை

மருத்துவகனவு நிறைவேறாததால்  சான்றிதழை ஆளுநருக்கு அனுப்பக்கோரிய  மாணவியின் தந்தை
X

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ கனவு நிறைவேறாததால் மாணவியின் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை ஆளுநருக்கு அனுப்பக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் தந்தை கடிதம் அளித்துள்ளார்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் பலன்தராத 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் ஆளுநருக்கு திருப்பி அனுப்ப வேண்டும்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ கனவு நிறைவேறாததால் மாணவியின் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை ஆளுநருக்கு அனுப்பக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் தந்தை கடிதம் அளித்துள்ளார்.

திருவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் ஹுசைன் இவருடைய மகள் ரயீஸா. இவர் தனியார் பள்ளியில் மாநில அரசு பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பில், 479(95.80%) மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 577.26(96.21%) மதிப்பெண்களும் பெற்று மருத்துவ கல்வியை கற்கும் ஆவலுடன் நீட்டிலும் 150 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் All India Medical Counselling மூலம் MBBS, மற்றும் Ayush Counselling மூலம் சித்தா படிப்புகளுக்கு விண்ணப்பித்தும்மாணவி ரயீஸாவுக்கு எந்த ஒரு சீட்டும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுபோன்ற நிலையில் எனது மகளின் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை பார்க்கும்போதெல்லாம் எனது மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் கடும் மன உளைச்சலில் இருந்து வருவதாகவும், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் படி, மருத்துவ கனவு தனது மகளுக்கு நிறைவேறி இருக்கும். நீட் தேர்வால் தனது மகளின் மருத்துவ கனவு நிறைவேறவில்லை. எனவே, எனது மகளுக்கு எந்தவகையிலும் பலன்தராத 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலும் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரியும் ஆளுநருக்கு திரும்ப கொடுத்துவிட்டு மன உளைச்சலில் இருந்து நிரந்தரமாக விடுதலையாகி விட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!