திருவள்ளூரில் மத்திய அரசை கண்டித்து, வேலை நிறுத்தம், மறியல் போராட்டம்

திருவள்ளூரில் மத்திய அரசை கண்டித்து, வேலை நிறுத்தம், மறியல் போராட்டம்
X

திருவள்ளூரில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது.

திருவள்ளூரில் தொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத மத்திய அரசை கண்டித்து, பொது வேலை நிறுத்தம்.மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.

தொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூரில் நடைபெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தம்.மற்றும் மறியல் போராட்டத்தில், திமுக தொழிற்சங்கத்தினர் தாங்களும் கச்சேரிக்கு போகிறோம் என்பது போல் பாவ்லா காட்டிய சம்பவம் அரங்கேறியது.

திருவள்ளூர் உழவர் சந்தை அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத மத்திய அரசை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம்.மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏஐடியுசி, திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சி ஐ டி யு., ஐ என் டி யூ சி. எச்எம்எஸ் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.


அதனால் திருவள்ளூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கலந்து கொள்ள வருகை தந்தவர்கள், தானும் கச்சேரிக்கு போகிறேன் என்பது போல போராட்டத்திற்கு வந்தவர்கள் ஹாயாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற போதும், தங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பே இல்லாதது போல் அமர்ந்திருந்தது காமெடியாக இருந்தது பத்திரிக்கையாளர்கள் திமுக தொழிற்சங்க நிர்வாகிகளை படம் பிடித்ததால் காவல் துறையினர் அங்கு உட்காரந்து இருந்தவர்களையும் கைது செய்தனர். .

மேலும் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை காவல் துறையினர் கையை காட்டி அழைத்த சம்பவமும் காமெடியாக இருந்தது. இந்நிலையில் திமுகவின் தொ.மு.ச.தொழிற்சங்கத்தினர். பெரும்பாலானோர் அங்கிருந்து நைசாக நழுவி சென்ற ருசிகர சம்பவமும் அரங்கேறியது. இந்த மறியல் போராட்டத்தால் சென்னை திருப்பதி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!