டீ கடை தகராறில் பெயிண்டர் மீது கொதிக்கும் பாலை ஊற்றியதால் பரபரப்பு

டீ கடை தகராறில் பெயிண்டர் மீது கொதிக்கும் பாலை ஊற்றியதால் பரபரப்பு
X
கொதிக்கும் பாலை ஊற்றியதால் காயம் பட்டவர்.
திருவள்ளூரில் டீ கடை தகராறில் பெயிண்டர் மீது கொதிக்கும் பாலை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே உள்ள ஐயப்பன் டீ கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ராஜூ என்பவர் ஐயப்பன் டீ கடை அருகே நண்பருடன் தொலைபேசியில் சண்டையிட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை தவறாக புரிந்து கொண்ட ஐயப்பன் டீக்கடை கேசியர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜூ மற்றும் கேஷியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த டீக்கடைக்காரர் பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த சுமார் 5 லிட்டர் பாலை எடுத்து ராஜூவின் மேல் ஊற்றியதில் வலது கை மற்றும் தோள்பட்டையில் தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.

தகவலறிந்து வந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று டீக்கடை உரிமையாளருக்கு ஆதரவாக செயல்பட்டு ராஜி மிரட்டி தான் குடிபோதையில் செய்தது தவறு என்று எழுதி வாங்கிக்கொண்டு தீக்காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கான எந்த நடவடிக்கை எடுக்காமலும் டீக்கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யாமலும் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் போதையில் இருந்த ராஜூ மறுநாள் காலையில் கை வீங்கி தோல் வலித்துக் கொண்டு வந்ததால் பயந்து போன ராஜா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீக்கடை கேசியர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கோரிக்கை கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி