திருவள்ளூர் அருகே இளைஞரிடம் பணம், செல்போன் வழிப்பறி செய்த 3 பேர் கைது

திருவள்ளூர் அருகே இளைஞரிடம் பணம், செல்போன் வழிப்பறி செய்த 3 பேர் கைது
X
திருவள்ளூர் அருகே இளைஞரிடம் பணம், செல்போன், மோட்டார் சைக்கிள் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த குருவாயல் கிராமத்தைச் சேர்ந்தவய் கிருஷ்ணன் மகன் சரவணன் (30), மற்றும் அவரது நண்பர் ஹேமசந்திரன் (30) இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பூண்டி நீர்தேக்கத்திற்கு சென்று மீன் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பீமன்தோப்பு சர்ச் பகுதியை கடந்து செல்லும் போது குறுக்கே சாலையில் குடிபோதையில் படுத்திருந்தவர்களிடம் வழிவிடுமாறு கேட்டுள்ளனர்.

அதற்கு மதுபோதையில் இருந்த நபர்கள் தரக்குறைவாக பேசியதோடு இருவரையும் தாக்கிவிட்டு பாக்கெட்டில் இருந்த செல்போனையும், ஹேமசந்திரன் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்க பணத்தையும் மோட்டார் சைக்கிளையும் வழிப்பறி செய்து மிரட்டியதோடு கொலை செய்து விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளனர்.

அங்கிருந்து இரண்டு பேரும் தப்பி ஓடி வந்துவிட்டனர். பிறகு சரவணன் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது சீயஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த கரும்பன் வீட்டிற்கு வந்த கணேஷ் (25), விஜய்(21), பீமன்தோப்பு தனுஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்து. இதனைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!