ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதார கேடு
ஆரம்ப சுகாதார நிலையம் முன் தேங்கி நிற்கும் மழை நீர்.
ஊத்துக்கோட்டை அருகே தொளவேடு கிராமத்தில் விவசாயிகள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் . இவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, கர்ப்பிணிகள் சிகிச்சை பெறவும் பெரியபாளையம், ஏனம்பாக்கம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதனால் தொளவேடு பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர் இந்நிலையில் தொளவேடு கிராமத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ₹ 25 லட்சம் செலவில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது . தற்போது இதில் அப்பகுதியினர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் மழை பெய்ததில் சுகாதார நிலையம் முன்பு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது : -
எங்கள் கிராமத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 3 கிலோ மீட்டர் தூரமுள்ள ஏனம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கும், 12 கி.மீ.தூரமுள்ள ஊத்துக்கோட்டை , தாமரைப்பாக்கம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது,
மேலும் எங்கள் ஊரில் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தின் முன்பு மழை பெய்து மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தேங்கிய மழை நீரை அகற்றினர். ஆனால் மீண்டும் மழை பெய்ததில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதை நிரந்தரமாக அகற்ற சம்மந்தப்பட்ட பிடிஒ அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu