மச்ச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சீனிவாச பெருமாள்

மச்ச அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்த சீனிவாச பெருமாள்
X

மச்ச அவதாரத்தில் வீதி உலா வந்த  சீனிவாச பெருமாள்.

திருவள்ளூர் அடுத்த மும்முடிக்குப்பம் கிராமத்தில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் பெருமாள் மச்சா அவதாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் வயலூர் அடுத்த மும்முடிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள 250 ஆண்டுகள் பழமையான சீனிவாச பெருமாள் சுவாமி மச்ச அலங்காரத்தால் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர்ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலூர் அடுத்த மும்முடிக்குப்பம் கிராமத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது.

இக்கோவில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கோவிலில் உற்சவராக உள்ள சீனிவாச பெருமாள் சுவாமி பல்வேறு ரூபங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள மூலவர் சீனிவாச பெருமாளுக்கு காலையில் பால், தயிர், சந்தனம், இளநீர்,பன்னீர், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட பல்வேறு வாசகங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், அலங்காரம் செய்து தீப, தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. மாலைஉற்சவர் சீனிவாச பெருமாள் சுவாமி பத்து அவதாரங்களில் ஒன்றான முதல் அவதாரமான மச்ச அலங்காரத்தில் சீனிவாச பெருமாள் கிராம முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமிக்கு தேங்காய் பழம் படையலாக படைத்து தரிசனம் செய்தனர்.

கடந்த வாரம் இதே பெருமாள் சாமி பிஸ்கட் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி