ஸ்ரீ முத்தாலம்மன் பொன்னியம்மன் ஆலய தீமிதி திருவிழா
ஸ்ரீ முத்தாலம்மன் பொன்னியம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன் ( முதல் படம்)
பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் 27 ஆம் ஆண்டு முத்தாலம்மன் கோயில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த 75.அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்தாலம்மன், பொன்னியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் 27 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 26 ஆம் தேதி கங்கை திருட்டுதல், அம்மனுக்கு காப்பு கட்டுதல் இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் தொடங்கியது.
நாள்தோறும் அம்மனுக்கு பால்,தயிர்,சந்தனம், ஜவ்வாது,பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக நடைபெற்ற தீமிதி திருவிழாவின் இறுதி நாளான இன்று காப்பு கட்டி விரதம் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் சிவன் கோவில் அருகே புனித நீராடி,உடல் முழுவதும் சந்தனம் மலர்களால்,அலங்காரம் செய்து ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் ஒருவருக்கு பின் ஒருவர் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
இதனை அடுத்து வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த ஸ்ரீ முத்தாலம்மன் பொன்னியம்மன், மேளதாளங்கள் முழங்க, அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் இரவு வான வேடிக்கையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் அளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu