சாய்பாபா மகா சமாதி அடைந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
பெரியபாளையம் அருகே ராள்ளபாடி சாய்பாபா கோவிலில் விஜயதசமி பெரும் விழா சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம்-ஆரணி இடையே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் உள்ளது.
இக்கோவிலில் விஜயதசமி சிறப்பு பெருவிழா மற்றும் சாய்பாபாவின் 106ஆவது மகா ஜீவசமாதி அடைந்த தினத்தை முன்னிட்டு அதிகாலை மூலவர் சாய்பாபாவிற்கு சிறப்பு ஆரத்தி, தொடர்ந்து ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் கைகளால் பாபாவிற்கு பாலாபிஷேகம், செய்யப்பட்டது.
தொடர்ந்து உலக நன்மைக்காகவும் பாபாவின் 106.ஆவது ஆராதனையை நாளை முன்னிட்டு ஆலய வளாகத்தில் விக்னேஸ்வர பூஜை, சாய்பாபாவின் பரிபூரண அருள் வேண்டி மகா சங்கல்பம்,தொடர்ந்து கணபதி ஹோமம்,சீரடி சாய் ஹோமம், தன்வந்திரி சுதர்சன ஹோமம், சீரடி சாயி மூல மந்திர ஹோமம், ஆயுள் அபிவிருத்தி வேண்டி ஆயுஷ் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் பாபாவிற்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும்,திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து ஆரத்தி பூஜை நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பஜனை பாடல்கள் பாடினார்.
தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. மாலை 7 மணி அளவில் 106 பெண் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது.
மேல தாளங்கள் முழங்க உற்சவர் பாபா கோவில் சுற்றி பல்லாக்கில் வளம் வந்த போது திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட 106 பெண்கள் கையில் திருவிளக்கை ஏந்தி ஆலய மாட வீதி உலா வந்து பாபாவை தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் சிவகுமார் கலந்து கொண்டார் அவருக்கு ஆலய நிர்வாகி உதயகுமார் சிறப்பு செய்தார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிவ சாயி சேவா அறக்கட்டளையினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu