புனித பிரான்சிஸ் சலேசையர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம்
உலக மக்களுக்கு சமாதானம் வேண்டி திருவள்ளூரில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சலேசையர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
2023 ஆம் ஆண்டின் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயற்கை சீற்றத்தினால் மக்கள் சமாதானம் என்று தவித்து துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலை மாறி மக்கள் சமாதானத்தோடு புதிய 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் சமாதானமாக தொடங்க வேண்டும் என்பதற்காக திருவள்ளூர் பகுதியில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சலேசையர் திருச்சபையில் விசேஷ பிரார்த்தனை கூட்டம் ஏறெடுக்கப்பட்டது.
இந்த ஆலயத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 2024 ஆண்டில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் நன்மை வேண்டி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டன.
மேலும் இந்த ஆண்டில் சகோதரத்துவம் மத நல்லிணக்கம், ஒற்றுமையுணர்வு அனைவரிடமும் வளர வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் மற்றொரு இடத்தில் அன்பு கூற வேண்டும் என பிரார்த்தனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இயேசு பிரான் தாய் அடக்கிய தொட்டிலில் பார்வையிட்டு அன்பை வெளிப்படுத்தி அனைவரும் பொத்தாடை அணிந்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி ஒருவருக்கு ஒருவர் தங்களின் அன்பை பரிமாறி 2024 யின் புதிய ஆண்டினை உற்சாகமாக கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu