நடிகர் விஜயின் கோட் படம் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் சிறப்பு பூஜை

நடிகர் விஜயின் கோட் படம் வெற்றி பெற வேண்டி  ரசிகர்கள் சிறப்பு பூஜை
X

நடிகர் விஜயின் கோட்ட திரைப்படம் வெற்றி பெற வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

விஜய் நடித்த கோட் திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருப்பாச்சூர் வாசிஸ்வர சுவாமி கோவிலில் ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 100 நாள் வெற்றி நடை போட வேண்டும் என விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ந் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இந்நிலையில் விஜய் ரசிகர்கள் கோட் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் திருவள்ளூர் விஜய் மக்கள் இயக்கம் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி தலைமையில் விஜய் ரசிகர்கள் திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வாசிஸ்வர சுவாமி திருக்கோயிலில் திரைப்படத்தின் போஸ்டரை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதனைதொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.இதில் திருவள்ளூர் தொகுதி மற்றும் பூந்தமல்லி தொகுதி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது