விவசாய இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நாளை சிறப்பு முகாம்

விவசாய இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நாளை சிறப்பு முகாம்
X
திருவள்ளூரில் விவசாயத்திற்காக இலவச இணைப்பு கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு நாளை சிறப்பு முகாம்.

இலவச மின்சாரம் கோரி விண்ணப்பித்த விவசாயிகளுக்கு, நாளை சிறப்பு முகாம் நடைபெறுவதாக செயற்பொறியாளர் தகவல்.

திருவள்ளூர் கோட்டத்தில், இலவச விவசாய மின் இணைப்பு இணைப்பு கேட்டு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். திட்டத்தின் கீழ் பதிவு பெற்றவர்களுக்கு, நாளை திங்கட்கிழமை திருவள்ளூர் பெரியகுப்பத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

ஊத்துக்கோட்டை லட்சு வாக்கம், பேரண்டூர். தண்டலம், காக்க வாக்கம், செங்கரை, பெரியபாளையம், கன்னிகைப்பேர், ராமஞ்சேரி.பூண்டி புல்லரம்பாக்கம், மெய்யூர், எறையூர், வெள்ளாத்துக்கோட்டை, பாலவாக்கம், போந்தவாக்கம், மாம்பாக்கம், பென்னாலுார்பேட்டை, ஆத்துப்பாக்கம், முக்கரம்பாக்கம், செங்கரை, கிளாம்பாக்கம், ஏனம்பாக்கம், அத்திவாக்கம், கல்பட்டு, பண்டிகாவனுார், மஞ்சங்காரணை, பாப்பரம்பாக்கம், சேலை, ஏகாட்டுர் மற்றும் அதை சுற்றியுள்ள விவசாயிகள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு, மின்வாரிய செயற்பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலவச மின்சாரம் கோரி விண்ணப்பித்த விவசாயிகளுக்கு, நாளை சிறப்பு முகாம் நடைபெறுவதாக செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai automation in agriculture