மாமியாரின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற மருமகன்: போலீஸ் வலைவீச்சு
முத்துகிருஷ்ணன், மணிகண்டன்
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே பூச்சி அத்திப்பேடு கள்ளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் 60. இவர் அலமாதி பால்பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கும் எடப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த எஸ்தர் 42 என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் எஸ்தரின் வீட்டில் எஸ்தரும் மகள் தீபிகா, மருமகன் மணிகண்டன் இளநீர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது முத்துகிருஷ்ணன் எஸ்தர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மணிகண்டன் என்னுடைய மாமியாரிடம் ஏன் பேசுகிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இளநீர் வெட்டும் கத்தியை எடுத்து முத்துகிருஷ்ணனை தலையால் சரமரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்.
இதில் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மணிகண்டனை
தேடி வருகின்றனர். மாமியாரிடம் கள்ளத்தொடர்பில் இருந்த நபரை மருமகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu