திருவள்ளூர் அருகே போதையில் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
வரதராஜுலு.
திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜுலு (85); இவருடைய மகன் ரகுராமன் (60) ரகுராமன் வரதராஜூலுக்கு இடையே வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரகுராமன், தந்தையை பிடித்து தள்ளிய போது அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த வரதராஜூலு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மப்பேடு காவல்துறையினர் தந்தையை கொன்ற மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
வரதராஜூலு உடன் பிறந்த 4 தம்பிகளின் மகன்கள் சொத்தை பிரித்து தரக்கோரி வரதராஜுலு இடம் அடிக்கடி ஏற்கனவே தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பிறகு தான் கொலை செய்யப்பட்ட விவகாரம் முழுமையாக தெரியவரும் காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu