திருவள்ளூரில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
மகளிர் உரிமை துறை செயல்பாடுகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்து.11 பேருக்கு 1.65 லட்சம் சிறு தொழில் தொடங்க நிதி உதவி வழங்கினார்.
வரும் 19-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் துணை முதல் அமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கலாம், இது தனிப்பட்ட திமுகவின் முடிவு எனவும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயல்பாடுகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த குடில்களை பார்வையிட்டு சமூக நல மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட மகளிர் அதிகார மையத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து அவர்,
கூட்ட அரங்கில் நலிந்த பிற்படுத்தப்பட்ட கிறிஸ்துவ மகளிர் 11 பேருக்கு ₹1.65 லட்சம் மதிப்பிலான சிறு தொழில் தொடங்க நிதி உதவி வழங்கி மேலும் தொழிற்சாலைகள் அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட பிற இடங்களில் பெண்கள் ஆன்லைன் மூலமாக பாலியல் புகார் அளிக்கும் விதமாக செயலியை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சென்னையில் பெண்களுக்கான பிங்க் ஆட்டோ சேவை இந்த ஆண்டு தொடங்கப்படும் ,சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களும் பிங்க் ஆட்டோ திட்டம் வரும், பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தடை சட்டம் 2013 கீழ் மூலமாக 10 பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் பெண்கள் புகார் அளிக்க புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக 3.20 லட்சம் மணவர்கள் பயன் பெறும் வகையில் ₹370 கோடி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் 200 பேருக்கு அத்திட்டம் பெற வங்கி கணக்கு தொடங்க காலதாமதம் ஏற்பட்டு வருகிறது எனவும்,காலை உணவு திட்டம் நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளிலும் விரிவுபடுத்த முதல்வர் முடிவு செய்வார், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் 19ஆம் தேதி வருவது எதிர்பார்க்கலாம், அனைவரும் எதிர்பார்க்கின்றனர், உதயநிதி துணை முதல்வராவது தனிப்பட்ட திமுக எடுக்கும் முடிவு எனவும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu