சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.87.5 லட்சம்

சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.87.5 லட்சம்
X

சிறுவாபுரி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்கள்.

சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ.87.5 லட்சம் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2மாதங்களில் ரூபாய் 87லட்சத்து 5ஆயிரத்து 619 ரூபாயும், தங்கம் 125கிராமும், வெள்ளி 9கிலோ ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

இந்நிலையில் கடந்த 2.மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி ஆலய வளாகத்தில் முன்னிலையில் நடைபெற்றது. திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ 87லட்சத்து 5ஆயிரத்து 619ரூபாயும், தங்கம் 125கிராமும், வெள்ளி 9கிலோ காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது. இன்று ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு கட்டுக்கடகாத பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செவ்வாய் கிழமை நாட்களில் இக்கோவிலுக்கு வந்து சாலையில் கிலோமீட்டர் கணக்கில் வெயிலில் நின்று காத்திருந்து மண்டபம் வழியே கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

கோவிலில் அடிப்படை வசதிகள் சரிவரை இல்லை என்றும், முதியோர்கள், குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும், குழந்தை பெற்ற தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுக்க பாலூட்டும் அறை ஏற்படுத்தி தர வேண்டும். விஐபி தரிசனம் பெயரில் அவர்களை மூலஸ்தானத்தில் கொண்டு சென்று சிறப்பு செய்து அனுப்புவதில் மணிக்கணக்கில் ஆகிவிடுகிறது.

இது மட்டுமல்லாமல் சாலையில் இரு புறம் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதாகவும், இதனை தட்டிக் கேட்க வேண்டிய போலீசாரே வேடிக்கை பார்த்து வருவதாகவும், இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என்று சாமானிய மக்கள் சிறுவாபுரி கோவிலில் சாமி தரிசனம் என்பது எட்டாக்கனி போல் ஆகிவிட்டதாகவும், சாமான்ய மக்களும் எளிதாக சாமி தரிசனம் செய்ய மாற்று ஏற்பாடு அரசு செய்ய வேண்டும், விஐபி தரிசனம் செவ்வாய்க்கிழமை நாட்களில் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story