ஊத்துக்கோட்டையில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்!
நீட் தேர்வு மருத்துவ படிப்புக்கு மட்டுமல்ல வரும் காலங்களில் அனைத்து உயர்கல்வி படிப்புக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வினை ஒன்றிய அரசு செயல்படுத்த இருக்கிறது என்று ஊத்துக்கோட்டையில் நடைபெற்ற நீட்விளக்கு கையெழுத்து இயக்கத்தில் கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன் பேச்சு.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தினை அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே வி லோகேஷ் தலைமையில் ஊத்துக்கோட்டையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள், பங்கேற்று நீட் தேர்வு முறைக்கு எதிராக கையெழுத்திட்டனர்.
பின்னர் பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன் நீட் தேர்வு மருத்துவ படிப்புக்கு மட்டுமல்ல வரும் காலங்களில் அனைத்து உயர்கல்வி படிப்புக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வினை ஒன்றிய அரசு செயல்படுத்த இருக்கிறது, உயர்கல்வி துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது இதன் காரணமாகத்தான் ஒன்றிய அரசு நீட் தேர்வை கொண்டு வந்து வட மாநில மாணவர்களை அதிக அளவில் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக இதுபோன்ற திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும்
நீட் நுழைவு தேர்வினை அன்று முதல் இன்று வரை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார் என்று தெரிவித்தார். முன்னதாக மறைந்த முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கி.வேணு மறைவுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் இ.ஏ.பி. சிவாஜி, மாவட்ட அவைத்தலைவர் பகலவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.ஜெ. மூர்த்தி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் வில்சன் நிலவழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், மாதர் பக்கம் ஜெ.மோகன் பாபு, சங்கர், வி.பி.ரவிக்குமார், பேரூராட்சி நகரச் செயலாளர் அபிராமி குமரவேல், ஒன்றிய செயலாளர்கள் மீஞ்சூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், ஜான் பொன்னுசாமி, செல்வ சேகரன், மற்றும் நிர்வாகிகள் சம்சுதீன்,தாரட்சசி கார்த்திக், ஜெயலலிதா சசிதரன், கோல்ட் மணி, லிட்டர் திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu