ஊத்துக்கோட்டையில் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்.
ஊத்துக்கோட்டையில் அமைந்துள்ள சாய்பாபா கோவில்
ஊத்துக்கோட்டைபேரூராட்சி ரெட்டி தெருவில் அருள் மிகு ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயில் புதிதாக கட்டப்பட்டது . பின்னர் இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதாக முடிவு செய்யப்பட்டு இதன் விழா 4 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி முதல் நாள் 29 தேதி மாலை 6 மணிக்கு மகா கணபதி பூஜை , வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடந்தது.
பின்னர் 30 தேதி அதிகாலை மங்கள இசை திருமுறை பாராயாணம், சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை , கணபதி ஹோமம் நடந்தது. மாலை மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், தன பூஜை, முதல் கால யாகசாலை பூஜை ஆகியவையும்,
பின்னர் 31 தேதி காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, சோம பூஜை, வேதிகா பூஜை அர்ச்சனை, இரண்ட.டாம் கால யாகசாலை பூஜை , மாலை லலிதா சகஸ்ரநாமம், மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.
4 வது நாளான காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம் ஆகியவையும் 10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு மூன்று முறை கோயிலை வலம் வந்து பின்னர் 10.30 மணிக்கு கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது, விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊத்துக்கோட்டை, தாராட்சி, போந்தவாக்கம், அனந்தேரி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள் சந்தீப், வைத்தியலிங்கம், செல்லன் மற்றும் கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் , பேரூராட்சி துணைத்தலைவர் குமரவேல் , கவுன்சிலர்கள் அபிராமி, கோகுல்கிருஷ்ணன், ஆனந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu