டீனேஜ் மாணவர்களிடம் பாலியல் சீண்டல்: தலைமை வார்டன் போக்சோவில் கைது

டீனேஜ் மாணவர்களிடம் பாலியல் சீண்டல்:  தலைமை வார்டன் போக்சோவில் கைது
X
மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை வார்டன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கசுவா கிராமத்தில் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் பள்ளியில் 5 மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை வார்டன் கைது செய்து சிறையில் அடைப்பு.

திருவள்ளூர் மாவட்டம் கசுவா கிராமத்தில் உள்ள ஒரு அறக்கட்டளை சார்பாக இயங்கும் பள்ளியில் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அறக்கட்டளை வளாகத்தில் உள்ள விடுதியில் சுமார் 65 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இதில பணிபுரியும் ஸ்ரீவல்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (46) என்பவர் அந்த விடுதியில் உள்ள 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 5 மாணவர்களை இரவு நேரங்களில் கால்களை அழுத்தி விட சொல்வதும், இந்த நேரங்களில் மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது குறித்து தற்போது, பொறுப்பேற்றுள்ள வார்டன் வெங்கட்ராமன் என்பவரிடம் மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புதிய வார்டன் அறக்கட்டளைத் தலைவர் புவனேஸ்வரி என்பவரிடம் புகார் தெரிவித்ததையடுத்து ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை செய்து காவல்துறையினர் 5 மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story