குடிநீருடன் கலந்த கழிவுநீர்: வயிற்றுப்போக்கால் 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

குடிநீருடன் கலந்த கழிவுநீர்: வயிற்றுப்போக்கால் 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
X

மருத்துவ பரிசோதனை செய்து மாத்திரை மருந்துகளை வழங்கும் சுகாதாரத்துறையினர்.

தோமூர் கிராமத்தில் குடிநீருடன் கலந்த கழிவு நீர் குடித்ததால் வயிற்றுப்போக்கால் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் அடுத்த தோமூர் ஊராட்சியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து அதனை குடித்த கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் வயிற்றுப்போக்கு மயக்கம் காரணத்தினால் திருவள்ளூர் மருத்துவமனை அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் தோமூர் ஊராட்சியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊராட்சியில் உள்ள மக்களுக்கு பைப் லைன் மூலம் காலை, மாலை என இருவேளைகளில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து நேற்று குடிநீர் செல்லும் குழாயின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடிநீரில் கலந்தது. இதனை அறியாமல் அப்பகுதி மக்கள் பருகி வந்ததால் 10 பேருக்கு திடீரென வயிற்றுப்போக்கு மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 பேரை உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த சுகாதார துறை அதிகாரிகள், தோமூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கசிவு எங்கே ஏற்பட்டிருக்கிறது என கண்டாராய்ந்து அதனை சரி செய்து வீடு, வீடாக சென்று அனைத்து பகுதிகளும் ப்ளீச்சிங் தெளித்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டிகளை ஆய்வு செய்து தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மாத்திரை மருந்துகளை வழங்கினர். மேலும் இப்பகுதி மக்கள் குடிப்பதற்கு குளிரினேசன் செய்த குடிநீரை டேங்கர் மூலம் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு வழங்கினர். சம்பாதித்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!