மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த 7 மாத குழந்தை உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த 7 மாத குழந்தை  உயிரிழப்பு
X

பைல் படம்

மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் மடியில் இருந்த 7. மாத குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

மோட்டார் சைக்கிளில் தாய் மடியில் இருந்த 7. மாத குழந்தை தவறி கீழே விழுந்து பலத்த காலமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே கீழச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் குணா(30). இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார் இவரின் மனைவி முத்தமிழ் (25). இவர்களுக்கு ஜோசன் (3) மகன் உள்ளார். மேலும் இவர்களுக்கு லூவி டெரினா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது குணா மனைவி, குழந்தைகளுடன் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வை எழுதுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் அருகே கே.ஜி. கண்டிகை மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றனர். தேர்வு எழுதி முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் புற்றுக்கோயில் சாலையில் உள்ள வளைவில் திரும்பும்போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது முத்தமிழ் மடியில் இருந்த 7 மாத குழந்தை லூவி டெரினா தாய் கைப்பிடியிலிருந்து நழுவி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு பெண் குழந்தை லூவிடெரினா உயிரிழந்தது. இதுபற்றி திருவள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.



Tags

Next Story
ai marketing future