செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் இல்ல திருமண விழா திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொது செயலாளருமான எடப்பாடி கே.பழனி சாமி கலந்துகொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, பெஞ்சமின், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் 6000 கடைகள் உள்ளன. 4000 கடைக்கு டெண்டர் விடவில்லை முறைகேடாக இரண்டு ஆண்டு காலமாக பார்கள் செயல்பட்டு வருகிறது. அரசுக்கு வர வேண்டிய வருவாய் தி.மு.க.வை சேர்ந்த மேல் மட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
முறைகேடாக நடைபெற்ற பாரில் போலி மதுபானம் கலால் வரி செலுத்தாமல் ஒரு குவார்ட்டருக்கு 100 ரூபாய் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜி உத்தமர் போல் ஸ்டாலின் புலம்பி வருகிறார். வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவும், வருமான வரித்துறையும் ரெய்டு நடத்துவதாக கூறி வருகிறார்.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசுவது ஒன்று தற்போது பேசுவது வேறு முதல்வர் இரட்டை வேடம் போட்டு வருகிறார். ரூ. 30 ஆயிரம் கோடி குறித்து ஏதாவது செந்தில் பாலாஜி பேசிவிடுவாரோ என்ற அச்சத்தில் அனைவரும் சென்று பார்க்கின்றனர்.
செந்தில்பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் தார்மீக பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu