திருவள்ளூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.3 லட்சம் பறிமுதல்

திருவள்ளூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.3 லட்சம் பறிமுதல்
X

திருவள்ளூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 3 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 3 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் பழைய டோல்கேட் அருகே கனகம்மா சத்திரம் பகுதியில் இருந்து மாரிமுத்து என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 3 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் பழைய டோல்கேட் அருகே நாகரத்தினம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கனகம்மாசத்திரம் பகுதியிலிருந்து திருவள்ளூர் வழியாக சென்னை நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் அதில் கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 3 லட்ச ரூபாய் எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மூன்று லட்ச ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் திருவள்ளூர் நகராட்சியில் உள்ள தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்படுகிறாதா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாரிமுத்து என்பவர் கனகம்மாசத்திரம் பகுதியில் சக்தி என்டர்பிரைசஸ் என்ற பர்னிச்சர் கடை நடத்தி வருவதாகவும் அதற்கான பொருட்களை வாங்குவதற்கு சென்னைக்கு பணம் எடுத்துச் செல்வதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உரிய ஆவணங்களின்றி மூன்று லட்ச ரூபாய் எடுத்து வரப்பட்ட சம்பவத்தில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால் மூன்று லட்ச ரூபாய் திருப்பி அளிக்கப்படும் எனவும் ஆவணங்கள் சமர்ப்பிக்காத பட்சத்தில் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!