ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
காயமடைந்த பாஜக பிரமுகர் ரமேஷ் குமார்.
திருவள்ளூர் அருகே ஊராட்சிக்கு உட்பட்ட சாலை ஓரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற ஊராட்சி மன்ற தலைவியின் கணவரும், பாஜக நிர்வாகியுமான ரமேஷ் குமார் என்பவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் படுகாயம். சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சிறுவானூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் பவானி.இவருடைய கணவர் ரமேஷ் குமார் என்பவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் தற்போது பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் சிறுவானூர் ஊராட்சிக்கு செல்லும் சாலையின் ஓரங்களை அப்பகுதி சேர்ந்த சிலர் பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் பர்தாக்களை ஒன்றும் மற்றும் கொட்டைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் பொது மக்கள் சென்று வர இடையூறாக இருந்து வந்ததால் இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும், சாலையை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு அளித்ததாகவும், அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் பாஜக நிர்வாகியுமான ரமேஷ், ஜேசிபி இயந்திரம் மூலம் சாலை ஓரங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ளவர்கள் சிலர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அவர்களிடம் ரமேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு வந்த வேலு என்பவர் இவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், திடீரென ஆத்திரமடைந்து வேலு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ரமேஷின் தலை மற்றும் கை பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் குமாரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் மருத்துவ மனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து சென்னை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu