புட்லூர் ஊராட்சியில் பள்ளி ஆண்டு விழா

திருவள்ளூர் அருகே புட்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின், 62.வது ஆண்டு விழாவில் மாணவியர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் அருகே புட்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின், 62.வது ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் தொடங்கி வைத்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 62 ஆம் ஆண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ,மாநில பொதுச் செயலாளர் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி இரா.தாஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.
முன்னதாகவே.. கண்காட்சி துவக்கிவைத்து மாணவர்களை திறன் ஆய்வு செய்து மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை). மோகனா பள்ளி மாணவர்களை உற்சாக படுத்தி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
தொடர்ந்து மேள தாளங்களுடன் ஊர்வலம் ஆக பள்ளிக்கு தேவையான தண்ணீர் குடங்கள், பாய் ',நோட்டு புத்தகங்கள்,பேனா, பென்சில் சாக்பீஸ், உள்ளிட்ட பள்ளிக்கு பொருள்கள் அனைத்து பள்ளி மேலாண்மை குழுவினர் சீர்வரிசையாக வீதி வழியாக கொண்டு வந்து பள்ளியில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் புட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லோகம்மாள் கண்ணதாசன் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் வீரராகவன், எம். மல்லிகா, மீகா வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் புட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், தினேஷ் குமார் ,டிக் ரோஸ், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு விழாவில் பள்ளி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் பதக்கங்கள் வழங்கப்பட்டன தொடர்ந்து பள்ளி மாணவர்கள் அழகிய பாடல்களுடன் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடல்களுடன் நடனம் நடைபெற்றது.
பாரதியார் போன்று வேடம் அணிந்து மாணவர்கள் நடித்துக் காட்டினார்கள் நடனங்கள் நாடகங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கண்டு களித்தனர். நிகழ்ச்சியில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் மாலா, ஜெயகுமாரி, ரட்சிதா பரிதா, திலகவதி, கீதாலட்சுமி ,சங்கீதா, தாரணி , ஓவியா ஆசிரியர், இன்பநேசன் கார்த்திகா, கணினி ராதிகா ,, உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன்,காவியா, ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் மற்றும் பலர் பங்கேற்றனர்.ஊர் திருவிழா போல் மக்கள் அனைவரும் பங்கேற்று கண்டு களித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu