ஊத்துக்கோட்டை அருகே வீடு கட்ட முடியாமல் தடுக்கப்பட்ட பட்டியல் இன மக்கள்
ஊத்துக்கோட்டை அருகே பட்டியல் இன மக்கள் வீடு கட்ட முடியாமல் தடுக்கப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஊத்துக்கோட்டை அருகே பட்டியலின வகுப்பைச் சேர்ந்த வீடில்லா 43 குடும்பங்களுக்கு அரசு ஒதுக்கிய இடத்தில் வீடு கட்ட விடாமல் தடுக்கப்பட்டதால் பிரச்சினை ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட இலட்சிவாக்கம் கிராமத்தில் வசிக்கும் வீடு இல்லாத பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு தமிழக அரசு இலவச மனை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த இடத்தில் 43.குடிசைகளை அமைப்பதற்காக சென்ற பட்டியலின மக்களை கடந்த ஆறு மாதங்களாக தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை என்ற பெயரில் வட்டாட்சியர் குடிசை அமைக்க வரும்போது எல்லாம் கிராம மக்களை தடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை தனித்தனியாக நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து எதிர் தரப்பு நீதிமன்றத்தை நாடியது, இந்த நிலையில் நீதிமன்றத்தில் அவர்களது கோரிக்கை மனு ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த 43 குடும்பத்தினர் அரசு ஒதுக்கீடு செய்த இடத்தில் 5 குடிசைகளை அமைத்தனர். இதனை அறிந்த எதிர் தரப்பினர் அங்கு வீடு கட்ட கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வசந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பட்டியலின மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மூன்று நாட்கள் அவகாசம் கொடுங்கள் என்று கூறி உள்ளார்.
ஆனால் பட்டியலின மக்கள் அதனை ஏற்கவில்லை. இந்த கால அவகாசம் எதிர் தரப்பினர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் விதத்தில் அமைந்து விடும் என கூறினர். மேலும் காவல்துறையினர் வீடு கட்டுவதை தடுத்தது நிறுத்தியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியது . வீடு மனைகளை பெற்றவர்கள் வீடு கட்டுவோம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் அங்கு வந்த திருவள்ளூர் ஏ.டி. எஸ் பி.ஹரிகுமார் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. கணேஷ்குமார், வட்டாட்சியர் வசந்தி ஆகியோரது கோரிக்கைகளை ஏற்க மறுத்து இனி கால அவகாசம் தர முடியாது என்றும் பேச்சுவார்த்தைக்கு இனி அவசியம் இல்லை என்றும், நீதிமன்றமே எதிர் தரப்பினர் வழக்கை தள்ளுபடி செய்து விட்டதால் தாங்கள் வீடுகளை கட்டுவோம் எனக்கூறி குடிசைகளை அமைக்கும் பணியை தொடங்கி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டது.
இதனிடைய கூடுதல் காவல் துறையினரை அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தி வட்டாட்சியர் வேண்டுமென்றே பிரச்சனையை ஏற்படுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu