சசிகலாவுக்கு ஒருபோதும் அதிமுகவில் இடமில்லை, பி.வி. ரமணா தலைமையில் தீர்மானம்

சசிகலாவுக்கு ஒருபோதும் அதிமுகவில்  இடமில்லை, பி.வி. ரமணா தலைமையில்  தீர்மானம்
X
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பேசுகிறார்.
சசிகலாவுக்கு ஒருபோதும் அதிமுகவில் இடமில்லை என்று பி.வி. ரமணா தலைமையில் நடந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சசிகலாவுடன் பேசியவர்கள் மீது அதிமுக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து செயல்பட வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவை அபகரிக்க முயற்சி செய்யும் சசிகலாவை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுகவினர் கூட்டத்தில் ஒருபோதும் சசிகலாவுடன் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி அதிமுக நிர்வாகிகள், திருவள்ளூர் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future