முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: திருவள்ளூர் ஆட்சியர் எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல் பி ஜான் வர்கீஸ்.
Thiruvallur District Collector - திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய் காரணத்தினால் முக கவசம் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் வசூலிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல் பி ஜான் வர்கீஸ் எச்சரித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மீண்டும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா அறைகளை, ஆக்சிஜன் மையம் ஆகியவற்றை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு செய்து தெரிவிக்கையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 4 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மேலும் தொற்று பரவலை இருக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டும். கிருமிநாசினிகளை பயன்படுத்தி அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அரசு விதிமுறைகளை கட்டாயமாக பின் படுத்தி கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டுமென தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 977 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 765 பேர் பூரண குணமடைந்த நிலையில் தற்போது 273 பேர் தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது
கொரோனா வைரஸ் நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா நோய் தொற்று பரவலாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும், முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். தடுப்பூசி சிலிர்த்துக் கொள்ள வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், எனவும் முக்கவசம் அணியாத பட்சத்தில் ₹.500 அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய் காரணத்தினால் முக கவசம் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் வசூலிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல் பி ஜான் வர்கீஸ் எச்சரித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu