திருவள்ளூர் அருகே அடகு கடையில் போலி நகை கொடுத்து ரூ.1 லட்சம் மோசடி

திருவள்ளூர் அருகே அடகு கடையில் போலி நகை கொடுத்து ரூ.1 லட்சம் மோசடி
X

போலி தங்க நகை.

திருவள்ளூர் அருகே அடகு கடையில் போலி நகை கொடுத்து ரூ.1 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு சத்திரம் கிராமப்பகுதியில் அசோக்குமார் அடகு கடை நடத்தி வருகிறார்.

இவரது அடகு கடைக்கு மணி, முருகன் ஆகியோர் வந்து தங்க சங்கிலி விற்க வேண்டும் என கூறி தங்க வர்ணம் பூசிய கவரிங் நகையை அசோக்குமாரிடம் கொடுத்து விட்டு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு 2 பேரும் அங்கிருந்து சென்றனர்.

அசோக்குமார் அந்த நகையை பரிசோதனை செய்தபோது, அது போலியான கவரிங் செயின் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து அசோக் குமார் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த முருகனை கைது செய்தனர். இந்நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவருடன் மோசடியில் ஈடுபட்ட மணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story