திருவள்ளூர் அருகே ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: காவல்துறை விசாரணை.

திருவள்ளூர் அருகே  ஏடிஎம் மையத்தில்  கொள்ளை முயற்சி: காவல்துறை விசாரணை.
X

ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு காமெராவில் கறுப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருவே ஏடிஎம் மையத்தில் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கூட்டுச்சாலை பகுதியில் ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் சாலையில் அருகே உள்ள இந்தியா ஒன் என்கின்ற தனியார் ஏடிஎம் மையத்தில் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கேமரா மற்றும் ஏடிஎம் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவிற்கு மர்ம நபர்கள் கருப்பு வண்ணம் ஸ்ப்ரே அடித்து கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசன் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் 20.க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் வெல்டிங் மிஷின் கட்டிங் மிஷினை வைத்து கட் செய்து 75 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவர்களைப் பிடிக்க தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் காவல்துறையினர் தேடி வருகின்ற நிலையில் தற்போது பூண்டியில் ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கு கருப்பு வண்ணம் ஸ்பிரே அடிக்கப்பட்டு கொள்ளை முயன்றவர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுதாகர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார் .

மேலும் ஸ்ப்ரே அடிக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையத்தில் பணம் ஏதும் திருடு போகவில்லை எனவும் சிசிடிவி கேமராவிற்கு ஸ்பிரே மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் ஆந்திராவிற்கு தப்பிச்செல்லும் வழியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா