தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
Diwali Lottery -தீபாவளி பண்டு சீட்டு நடத்தி மக்கள் பணத்தை ஏமாற்றி தலைமறைவான நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜே.பி. ஜோதி. இவர் தாமரைப்பாக்கம் பகுதியில் ஏஜென்சி ஒன்று நடத்திவருகிறார்.இது மட்டுமல்லாமல் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்தார். மாதம் ரூ..1000 செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் மளிகை பொருட்கள் வழங்குவதாகவும் மாதம் ரூ. 500. கட்டினால் 2 கிராம் தங்கத்துடன் இனிப்பு ஏனைய பொருட்களும் வழங்கப்படும் என்று அறிவித்து பணம் வசூலித்து வந்துள்ளார்.
அவரிடம் தாமரைபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளியூர், வெங்கல், செம்பேடு, சேத்துப்பாக்கம், பூவளம்பேடு மற்றும் குறுவாயில், பாகல்மேடு, செம்பேடு, பூச்சி அத்திப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் இந்த தீபாவளி பண்டு சீட்டு கட்டிவந்துள்ளனர்.மேலும் ஒவ்வொரு கிராமங்களிலும் ஏஜென்ட்டுகள் நியமித்து கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகை விரைவில் உள்ள சூழலில் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் இருந்துள்ளார். இதுபற்றி பணம் கட்டியவர்கள் சென்று கேட்டபோது பொருட்களுக்கு பணம் கட்டி உள்ளோம் அது சில நாட்களில் பொருட்களை தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜே.பி.ஸ்டார் ஏஜென்சி கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு உரிமையாளர் ஜோதி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள்100.க்கும் மேற்பட்டவர்கள் தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள ஜே.பி. ஸ்டார் ஏஜென்சி கடை முன் திருநின்றவூர் பெரியபாளையம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பால் பெரியபாளையத்திலிருந்து திருநின்றவருக்கும் திருநின்றவூர் பகுதியில் இருந்து பெரியபாளையம் பகுதிக்கு செல்லும் அரசு பேருந்து தனியார் பேருந்துகள் இருசக்கர வாகனம் கார் உள்ளிட்டவைகள் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கின.
சம்பவ இடத்திற்கு வந்த அதிவிரைவுப்படை காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் போக்குவரத்து நெரிசல் சிக்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொண்டு சென்றனர் தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. சாரதி, மற்றும் வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் திருநின்றவூர் பெரியபாளையம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu