வெங்கலில் அரசு வேலை வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி குடும்பத்துடன் சாலை மறியல்
குடும்பத்துடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி.
Disabled People- திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் நேரு பஜார் பகுதியில் வசித்து வருபவர் (33) செல்வகுமார். மாற்றுத்திறனாளியான இவர் 7ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். குடும்ப வறுமையின் காரணமாக தமக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்துள்ளார்.
இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் வெங்கல் பஜாரில் தமது குடும்பத்தினருடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். தந்தையை இழந்து வயதான தாயாருடன் வறுமையில் தவித்து வருவதாகவும், கடந்த 2ஆண்டுகளாக கொரோனாவால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதால் ஏழ்மையில் தவித்து வரும் தமக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும் வறுமை காரணமாக 100.நாள் பணிக்கு சென்று வந்ததாகவும், தற்போது 100நாள் வேலையும் தமக்கு வழங்காததால் மிகுந்ம சிரமத்திற்கு ஆளாவதாக வேதனை தெரிவித்தார். அரசு வேலை வழங்கும் வரை தற்காலிகமாக 100நாள் வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் காவல்துறை ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் செல்வகுமாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து செல்வகுமார் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu