100 நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து சாலை மறியல்

100 நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து சாலை மறியல்
X
முறையாக 100 நாள் வேலையை வழங்காததை கண்டித்து திருவள்ளூர் - பேரம்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம், புதிய திருப்பாச்சூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணி செய்யும் பணியாளர்களுக்கு, முறையாக வேலை வழங்காததால், திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள் திருவள்ளூர் - பேரம்பாக்கம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர தாசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் திருவள்ளூர் தாலுகா போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி மக்களுக்கு 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை வழங்க ஊராட்சி செயலர் விஜயனிடம் தெரிவித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!