/* */

திருவள்ளூரில் ஆட்டோ - லாரி மோதிய விபத்தில் பெண் பலி: 5 பேர் படுகாயம்

திருவள்ளூர் அருகே ஆட்டோ - லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார்; 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் ஆட்டோ - லாரி மோதிய விபத்தில் பெண் பலி:  5 பேர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான ஆட்டோ

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் துளசி அனுமான்வாடி கிராமத்தை சேர்ந்தவர் ஞானேஸ்வர்(25). லாரி ஓட்டுநர். இவர், ஊத்துக்கோட்டையை நோக்கி லாரியை ஓட்டி வந்தார். சீத்தஞ்சேரி கூட்டுசாலையில் வந்தபோது எதிரே, திருவள்ளூர் நோக்கி வந்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்த கலையரசன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ மீது லாரி மோதியது.

இதில், ஆட்டோவில் பயணம் செய்து வந்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்த ஜோதி (40) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த அதே கிராமத்தை சேர்ந்த சாரதாம்பாள் (65), பொம்மி (60), வைஜெயந்தி மாலா (50), உஷா ராணி (55), சரஸ்வதி (65) ஆகிய ஐந்து பெண்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்த பென்னலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபர்.

படுகாயமடைந்த 5 பெண்கள், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, ஊத்துக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் குமார் வழக்கு பதிந்து, லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 30 March 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!