குப்பை கழிவுகளால் ஏரி தண்ணீர் மாசுபடும் அபாயம்

குப்பை கழிவுகளால் ஏரி தண்ணீர் மாசுபடும் அபாயம்

பெரியபாளையம் அருகே ஏரி பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகள்.

பெரியபாளையம் அருகே குமரப்பேட்டை அஞ்சாத அம்மன் கோவில் அருகே உள்ள ஏரியின் அருகே குப்பை கழிவுகள் கொட்டுவதால் தண்ணீர் மாசுபடும் அபாயம். ஏரியை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கும்பரப்பேட்டை ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கே. ஆர்.கண்டிகை,ராள்ளபாடி கிராமங்களும் அடங்கும்.

இந்த ஊராட்சிக்குட்பட்ட அஞ்சாத அம்மன் கோவில் அருகாமையில் சுமார் ஐந்து ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியின் சுற்றி சுமார் 150 ஏக்கர் க்கு மேற்பட்ட விலை நிலங்கள் உள்ளன. இது மட்டுமல்லாமல் அருகாமையில் ஆரணி ஆறும் செல்கிறது.

இந்நிலையில் மழைக்காலங்களில் விலை நிலங்களில் தேங்கி நிற்கும் நீரை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கால்வாய் மூலம் திறந்து விடும் தண்ணீர் இந்த ஏரியில் வந்து சேரும். மேலும் இந்த ஏரியின் அருகே ஊராட்சிக்கு சொந்தமான சுமார் நான்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு இங்கிருந்து பைப் லைன்களின் மூலம் கே. ஆர்.கண்டிகை, குமரப்பேட்டை பகுதிகளில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டில் தண்ணீரை நிரப்பி காலை, மாலை என இரண்டு வேலைகளில் தங்குத் தடையின்றி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஏரியின் அருகே அப்பகுதியில் உணவகங்கள், கோழி இறைச்சி கடைகள், மற்றும் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படு

ம் குப்பை கழிவுகளை இந்த ஏரியின் பகுதியில் இரவு நேரங்களில் கொட்டி செல்வதால் அவை காற்றில் பறந்தும் அருகில் உள்ள ஏரியில் கலந்து தண்ணீர் மாசு ஏற்படும் அபாயம் உள்ளது. இது மட்டுமன்றி கொட்டுகின்ற குப்பைகளில் உணவு தேடி பன்றிகள்,மாடுகள் அவற்றைக் கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

பெரியபாளையம்- புதுவாயில் இடையே சாலையின் அருகே இந்த ஏரி இருக்கும் பகுதியாகும் எனவே இவ்வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதால் இதிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story