வருவாய்த் துறை சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்
Revenue Department Association Protest
திருவள்ளூரில் தமிழ்நாடு வருவாய்த்துறையினர் சங்கம் சார்பில்மாவட்ட தலைவர் வெண்ணிலா தலைமையில் காத்திருப்பு போராட்டம். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 13ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது,
அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டப் போராட்டமான அனைத்து பணிகளையும் புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் உள்ள 315 க்கும் மேற்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களிலும்,94 வருவாய் அலுவலகங்களிலும்,38 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Revenue Department Association Protest
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டதலைவர் வெண்ணிலா தலைமையில் 50க்கும் மேற்பட்ட அலுவலர்கள் 10 அம்ச கோரிக்கைகளான பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநிலத் துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார்,மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் பிரபு, மாவட்ட பொருளாளர் முனுசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu