பெரியபாளையம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற தூர்வார கோரிக்கை

பெரியபாளையம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற தூர்வார கோரிக்கை
X

பெரியபாளையம் அருகே சின்னம்பேடு கால்வாய் மீது ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கால்வாய் தூர்வார முடியாத நிலையில் கால்வாயில் அடர்ந்த முட்பொதர்கள் வளர்ந்து உள்ளது.

பெரியபாளையம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் கரைகளை பலப்படுத்தி பூங்கா அமைக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள சின்னம்பேடு கிராமத்தில் சுமார் 1550.ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி ஒன்று உள்ளது இந்த ஏரியை சுற்றி சுமார் 4000.க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது.

இந்த நிலங்களில் பகுதி விவசாயிகள் நெற்பயிர், வெண்டைக்காய், கத்திரிக்காய்,வாழை, நிலக்கடலை, பூக்கள் உள்ளிட்ட பருவத்திற்கு ஏற்ப பயிர்களை நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பெரியபாளையம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் இருந்து சின்னம்பேடு வரை சுமார் 12.கிலோமீட்டர் அளவிற்கு கால்வாய் உள்ளது.

மழை மற்றும் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தண்ணீரை சின்னம்பேடு கால்வாய் வழியாக திருப்பி விடுவதால் சின்னம்பேடு ஏரி,புதுவாயில் ஏரி, சின்னம்பேடு அருகே உள்ள கீழ்மேனி ஏரிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர்மட்டம் சமநிலையில் இருந்து வருவதால் சுமார் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் முற்போகம் விவசாயம் செய்து வருவார்.

தற்போது பெரியபாளையம் கலைஞர் நகர் கிழக்கு பகுதியில் செல்லும் இக்கால்வாய் இரு புறம் கறைகளை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து பெரிய அளவில் கட்டிடங்களை கட்டி வசித்து வருகின்றனர்.

இது குறித்து நீர் பாசன சங்கத் தலைவர்கள் சோமு முதலியார், முன்னாள் தலைவர் ஜெயமோகன் ஆகியோர் கூறுகையில், பெரியபாளையம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் இருந்து சின்னம்பேடு வரை சுமார் 12 கிலோமீட்டர் வரை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்திற்காக கால்வாய் வெட்டப்பட்டதாகவும், அன்றிய காலகட்டத்தில் கால்வாய் மைய பகுதிகளில் இருந்து இரு புறம் சுமார் 150 அடி அகலம் இருந்ததாகவும், கால்வாய் தற்போது நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி கால்வாய் 20 அடி அகலத்திற்கு குறைவாக காணப்படுகிறது.

இந்த கால்வாய் மீது இருபுறங்களில் ஆக்கிரமிப்பு செய்து பெரிய அளவில் கட்டிடங்கள் கட்டியதால் கால்வாய் மிக குறைந்த அளவிலே காணப்பட்டு வருகிறது. பழைய காலகட்டத்தில் இந்த கால்வாய் வழியாக தண்ணீர் சீறி பாய்ந்து சென்று மேற்கொண்ட மூன்று ஏரிகள் ஒரே நாளில் நிரம்பிவிடும் என்றும், ஆனால் தற்போது ஒரு வாரத்திற்கு மேலாகவே இந்தத் தண்ணீர் சென்று சேர்வதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

தற்போது பருவ மழை வர இருக்கும் நிலையில் அடர்ந்த புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. தூர் வர வேண்டுமென ஹிட்டாச்சி இயந்திரத்துக்கு கூட இந்த கால்வாயில் இறக்கி பணி செய்ய முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிகரித்துள்ளது. இவர்கள் வீடுகளில் பயன்படுத்தும் கழிவுநீர் பைப்புகள் மூலம் கால்வாயில் திறந்து விடுகின்றனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்தி பூங்கா அமைத்து தர வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளிடமும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம், பொதுப்பணி துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

இப்பகுதி மக்கள் சிலர் தெரிவிக்கையில் கரை மீது வீடு கட்டுவதற்கு முன்பே குடிநீர், மின்சாரம் வழங்குவதற்கு அனுமதி மறுத்து இருந்தால், இதுபோன்று ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் வந்திருக்காது என்றும் எனவே அனுமதி அளித்த சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து கட்டிடங்களை அகற்றி கால்வாய் கறைகளை பலப்படுத்தி பூங்கா அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story